Monday 11 April 2011

கரூர் தொகுதிக்கான 18 அம்ச செயல்திட்டம்

காங்கிரஸ் வேட்பாளர் செல்வி ஜோதிமணி M.A., M.Phil அவர்களின்
18 அம்ச செயல்திட்டம்


1. கரூரில் உள்ள ஜவுளித் தொழில்களைப் பாதுகாக்க மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
2. கரூரிலிருந்து சென்னைக்கு மேலும் ஒரு ரயில் போக்குவரத்து அமைய ஏற்பாடு செய்யப்படும்.
3. கரூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படும்.
4. வாங்கல் – மோகனூர் பாலம் போல் நெரூர்,  – உன்னியூருக்கு பாலம் கட்டப்படும்.
5. வையாபுரி நகரிலிருந்து குளத்துப்பாளையம் செல்ல குகைவழிப் பாதை அமைக்கப்படும்.
6. கரூரில் புதிய பேருந்து நிலையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.
7. இனாம் கரூர், கரூர், தாந்தோணிமலை நகராட்சிகளின் கூட்டுக் குடிநீர்த் திட்டம் விரைவில் முடிக்கப்படும்.
8. ஆண்டாங்கோவில் கீழ்பாகம் மற்றும் மேல்பாகம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் 6 மாதத்தில் முடிக்கப்படும்.
9. கரூரில் அரசு மருத்துவக்கல்லூரியும் அரசு பொறியியல் கல்லூரியும் நிறுவப்படும்.
10. கரூர் நகரின் உள்கட்டுமானம் மற்றும் வடிகால் வசதிகள் மேம்படுத்தப்படும்.
11. படித்த இளைஞர்களுக்கு 6 மாதத்துக்கு ஒருமுறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
12. மண்மங்கலத்தில் விபத்துகள் அதிகம் நடைபெறுவதால் விரைவில் மேம்பாலம் கட்டப்படும்.
13. வாங்கல் வாய்க்கால் மற்றும் முதலியார் வாய்க்கால்கள் தூர்வாரி, தடுப்பணை கட்டி சீரமைக்கப்படும்.
14. பசுபதிபாளையம் இரயில்வே கேட்டில் குகைவழிப் பாதை பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
15. கொசுவலைத் தொழிலை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
16. பேருந்து கட்டுமானத் தொழில் (பஸ்பாடி) தொழில் மேலும் வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும்.
17. சேலத்தில் உள்ளது போல் விரைவில் அனைத்து தொழிலாளர்களுக்கான ESI பல்துறை சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும்.
18. வளர்ந்துவரும் இளம் தலைமுறையினரின் தொழில்திறனை மேம்படுத்த திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் (Skill Development Institute) அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நமது வெற்றி வேட்பாளர்
செல்வி செ. ஜோதிமணி M.A., M.Phil
வாக்களிப்பீர்
கை சின்னத்திற்கே!
இவண்
ஜனநாயக முற்போக்கு கூட்டணி, கரூர் சட்டமன்றத் தொகுதி.